மோகன் பாகவத்
மோகன் மதுகர் பாகவத் | |
---|---|
மோகன்ராவ் மதுகர்ராவ் பாகவத் | |
பிறப்பு | 11 செப்டம்பர் 1950 சந்தரபூர், இந்தியா |
பணி | ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்தின் தேசியத் தலைவர் |
சமயம் | இந்து சமயம் |
மோகன் மதுகர் பாகவத் (Mohan Madhukar Bhagawat, பிறப்பு: 1950) ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்திற்கு 2009 முதல் தலைவர் பதவி வகிக்கிறார். மருத்துவரான இவர் பிற்காலத்தில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் முழுநேர தொண்டராக சேர்ந்தவர்.[1]
இளமைக்காலம்
[தொகு]மோகன்ராவ் மதுகர்ராவ் பாகவத் 1950ல் மகாராட்டிர மாநிலம், சந்தரபூர் என்னும் ஊரில் பிறந்தார். இவரது தந்தை மதுகர் ராவ் பகவத், ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்தின் சந்தரபூர் தலைவரும், குஜராத்தில் ஆர் எஸ் எஸ் பிரச்சாரகராக இருந்துள்ளார். மூன்று இளைய சகோதரர்களும், ஒரு இளைய சகோதரியும் இவருக்கு உள்ளார்கள். லோக்மானிய திலக் வித்யாலையத்தில் பள்ளி படிப்பையும் ஜனதா கல்லூரியில் இளநிலை அறிவியல் பட்டமும் பெற்றவர். பஞ்சாப்ராவ் க்ரிஷி வித்யாபெத் கல்லூரியில் கால்நடை மருத்துவத்திலும். விலங்கு வளர்ப்புத் துறையிலும் பட்டம் பெற்றார். 1975ல் இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது ஏற்பட்ட நெருக்கடி நிலையின் போது ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்தின் முழு நேரத் தொண்டராக தன்னை இணைத்துக் கொண்டார்.
பொது வாழ்வு
[தொகு]இந்திய நெருக்கடி நிலையில் பணியாற்றியப் பிறகு 1977ல் மகாராட்டிரம் மாநில அகோலா என்ற ஊரின் சங்க நிர்வாகியானார். மற்றும் நாக்பூர், விதர்பா போன்ற ஊர்களின் சங் நிர்வாகியாகவும் பணியாற்றினார். 1991 முதல் 1999 வரை நாடு முழுவதுமுள்ள ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்தின் இளைஞர் படையின் உடற்பயிற்சி பொறுப்பாளராகயிருந்தார். 2009-ல் ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்தின் தலைவராக இருந்த கே. எஸ். சுதர்சன் உடல் நலக்குறைவால் பதவி விலகிய போது, மோகன் பாகவத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் திருமணம் செய்து கொள்ளவில்லை.
கொள்கை
[தொகு]இவரால் இந்துத்துவ கொள்கைகள் நவீன காலத்திற்கேற்ப முன்னிறுத்தப்படுகிறது.[2] வளமான மற்றும் பழைமையான இந்திய பாரம்பரிய மதிப்பை காப்பத்தில் முனைப்புக்காட்டுகிறார்.[3] தீண்டாமை ஒழிப்பு மற்றும் சாதி இணைக்கத்தை வலியுறுத்துகிறார்.[4][5]
கருத்துகள்
[தொகு]பசுமாடுகளை வளர்ப்பது ‘குற்றவியல் மனநிலை’யை குறைக்கும் .[6]
சமய நல்லிணக்கதிற்கான உரையாடல்
[தொகு]இந்து-இசுலாமிய சமய நல்லிணக்கத்திற்கான ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்தின் தலைவர் மோகன் பாகவத் 22 செப்டம்பர் 2022 அன்று அனைத்திந்திய இமாம்களின் அமைப்பின் தலைவரான உமர் அகமது இலியாசியை புது தில்லியில் சந்தித்துப் பேசினார். அவ்வமயம் தலைமை இமாம் இல்யாசி, மோகன் பாகவத்தை இராஷ்டிரப் பிதா (நாட்டின் தந்தை) என வர்ணித்தார்.[7][8][9]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Mohan Bhagwat: A vet and RSS pracharak for over 30 years, 21 March 2009, Times of India, [1]
- ↑ RSS names Mohan Bhagwat its new chief: ‘pragmatist’ & friend of Advani, Sunday , March 22, 2009, Indian Express
- ↑ RSS evolves with changing times: Bhagwat, Sunday, November 20, 2005, Press Trust of India, Indian Express
- ↑ Root out discrimination in society, Monday, January 29, 2007, The Hindu [2] பரணிடப்பட்டது 2012-11-07 at the வந்தவழி இயந்திரம்
- ↑ "RSS cobbles caste unity". www.telegraphindia.com.
- ↑ "Cow rearing decreased 'criminal mindset' in prisoners: Mohan Bhagwat" – via Business Standard.
- ↑ Mohan Bhagwat is ‘rashtra pita’, says top Muslim cleric after RSS chief visits mosque
- ↑ RSS chief is ‘rashtra pita’, says AIIO chief imam after meeting
- ↑ ‘Mohan Bhagwat is Rashtra Pita’: All India Imam Organisation chief
வெளியிணைப்புகள்
[தொகு]- உத்யோகப்பூர்வ இணையதளம் பரணிடப்பட்டது 2014-04-18 at the வந்தவழி இயந்திரம்
- சங்கத்தின் தமிழ் இணையதளம் பரணிடப்பட்டது 2012-04-14 at the வந்தவழி இயந்திரம்